சுடச்சுட

  

  பொள்ளாச்சி கோட்டாட்சியரிடம் மனு அளிக்க வந்த முதியவர் திங்கள்கிழமை மயக்கமடைந்தார்.
   பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவித் தொகை கேட்டு பொள்ளாச்சியை சேர்ந்த சின்ராஜ் என்ற முதியவர் மனு  அளிக்க வந்திருந்தார். இருக்கையில் அமர்ந்திருந்த அவர் திடீரென மயக்கமடைந்தார்.  அப்போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் முதியவரைப் பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். இதையடுத்து, கோட்டாட்சியர் ரவிகுமார் தனது வாகனத்தை அனுப்பி முதியவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்தார். 
   பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருநங்கைகள் சிலர் பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதை தடுக்க கோரி பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai