மூக்கனூர் அரங்கநாதர் கோயிலில் 5 ஐம்பொன் சிலைகள் திருட்டு

அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் அரங்கநாதர் கோயிலில் 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர்.

அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் அரங்கநாதர் கோயிலில் 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர்.
அன்னூர் அருகே உள்ள மூக்கனூர், சண்முகா நகரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அரங்கநாதர் கோயில் புதிதாக கட்டப்பட்டது. இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகிய 5 ஐம்பொன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இக்கோயிலின்  மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மூலம்  அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வாரத்தில்  சனிக்கிழமை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை அமாவாசை நாள் என்பதால் பூஜைகள் செய்வதற்கு கோயிலை காலை 10 மணியளவில் திறந்தனர்.
அப்போது கோயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டு, 5 ஐம்பொன் சிலைகளையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கோயில் கமிட்டி தலைவர் செல்வராஜ், அன்னூர்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அன்னூர் காவல் ஆய்வாளர் சண்முகம், தனிப்படை சிறப்பு ஆய்வாளர் சடையப்பன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com