மயில்களுக்கு விஷம் வைத்து கொலை
By DIN | Published On : 05th July 2019 07:27 AM | Last Updated : 05th July 2019 07:27 AM | அ+அ அ- |

சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள காடுவெட்டிபாளையத்தில் தனியார் தோட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டன.
இதுகுறித்து அருகாமையில் உள்ளவர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால், தகவல் தெரிவித்து சுமார் 10 மணி நேரமாகியும் வனத் துறையினர் அங்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தற்போது பருவமழை காலம் என்பதால் மானாவாரி விவசாய நிலங்களில் மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு நடவு செய்யப்பட்ட பகுதிகளில் மயில்கள் உணவுத்தேடி அப்பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. மகசூல் பாதிக்கும் என்பதால் இதுபோன்று விஷம் வைத்து மயில்களை கொல்லும் சம்பவம் நடைபெறுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.