சுடச்சுட

  

  அன்னூரில் திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்": ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 13th July 2019 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூரில் விரைவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
  அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் ஜூன் 18 ஆம் தேதி முதல் 3 நாள்கள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்னூர் தெற்கு உள்வட்டம், வடக்கு உள்வட்டம், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1759 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.  
  இதில் 109 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 172 பேருக்கு இனையதளம் மூலம் பட்டா மாறுதல், 54 பேருக்கு நத்தம் பட்டா வீட்டு மனை, 43 பேருக்கு சாதிச் சான்று, ஒரு ஆக்கிரமிப்பு அகற்றுதல், 109 இலவச வீட்டுமனைப் பட்டா பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. 
  இதையடுத்து, அதற்கான உத்தரவுகளை அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை வழங்கினார். 
  மேலும், அன்னூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் நிலம் ஆய்வு செய்யப்படுவதாகவும், விரைவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
  தொடர்ந்து புதிதாக அமைக்கப்படும் அன்னூர்-சொக்கம்பாளையம் செல்லும் தார் சாலையை ஆய்வு செய்தார். மேலும், சாலை அமைக்கும் பணி நடைபெற்றாலும் குடிநீர் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
  இந்த ஆய்வின்போது துணை ஆட்சியர் (பயிற்சி) கௌசல்யா, வட்டாட்சியர் சந்திரா, பேருராட்சி அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai