சுடச்சுட

  

  அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தின் மீது  வேன் மோதியதில் 2 பேர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
  அன்னூர் அருகே எல்லப்பாளையம், காந்தி காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் தன் தாய் ரங்கம்மாள் மற்றும் பேத்தி மவுலிகாஸ்ரீ ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் அன்னூர் - கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  கெம்பநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தை  ஓட்டி வந்த ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரங்கம்மாள் மற்றும் மவுலிகாஸ்ரீ ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். 
  மேலும், வேன் ஓட்டுநர் மயில்சாமி உள்ளிட்ட காயமடைந்த மூவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ரங்கம்மாள் உயிரிழந்தார். 
  இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai