உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி

கோவையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மக்கள் நல்வாழ் மற்றும் குடும்பநலத் துறை அலுவலகம் வரை சென்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடக்கி வைத்துப் பேசியதாவது: ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே மக்கள் தொகை தினம் கடைப்பிடிப்பதன் முக்கிய நோக்கமாகும். நாட்டின் மேம்பாட்டுக்கும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். 
பேரணியில் செவிலியர் கல்லூரி மாணவியர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ராமதுரை முருகன்,  பொது சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com