கொடிசியாவில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் நுழைவு வாயில் பகுதியில் குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில்

கோவை கொடிசியாவில் நடைபெற்று வரும் கண்காட்சியில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் நுழைவு வாயில் பகுதியில் குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வேளாண் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தொடங்கியது. இந்த கண்காட்சியைப் பார்வையிட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரளாக வந்திருந்தனர்.  இந்த நிலையில், வேளாண் கண்காட்சியில் இயந்திரங்கள் இருப்பதால் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்து குழந்தைகளுடன் வந்திருந்த விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்காமல் திடீரென குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறியதைக் கண்டித்து குழந்தைகளுடன் கண்காட்சிக்கு வந்திருந்த விவசாயிகள், பெற்றோர்கள் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அதேபோல், கல்லூரி மாணவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். கண்காட்சியை பார்வையிடுவதற்கு குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com