சிங்காநல்லூர் குளத்தில் தென்பட்ட அரிய வகை ஆமை

கோவை, சிங்காநல்லூர் குளக்கரையில் அரிய வகை நன்னீர் ஆமை வெள்ளிக்கிழமை நடமாடியது. 

கோவை, சிங்காநல்லூர் குளக்கரையில் அரிய வகை நன்னீர் ஆமை வெள்ளிக்கிழமை நடமாடியது. 
கோவை, சிங்காநல்லூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் மரங்கள் நடப்பட்டு நெருக்கமான காடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாரத்துக்கு ஒரு மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்விச் சுற்றுலா வந்து மரம் வளர்ப்பு மற்றும் மியாவாக்கி முறை குறித்து அறிந்து செல்கின்றனர். 
இந்நிலையில், சிங்காநல்லூர் எஸ்ஐஹெச்எஸ் காலனியில் உள்ள சிஎம்எஸ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிங்காநல்லூர் குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள அடர் வனத்தை வெள்ளிக்கிழமை  பார்வையிட்டனர். அப்போது, வனத்தின் ஒரு பகுதியில் அரிய வகை ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதைப் பார்த்த மாணவர்கள் குதூகலமடைந்தனர். 
இதுகுறித்து, வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்  கூறுகையில், இது ராக் டெர்ராபின் என்ற அரியவகை நன்னீர் ஆமை. உப்புத்தண்ணீர், கழிவுத்தன்மை உள்ள தண்ணீரில் இது உயிர் வாழாது. ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆமைகளுக்கு இனப்பெருக்க காலம் என்பதால், முட்டையிடுவதற்காக  அடர்ந்த  வனப்பகுதியைத் தேடி வந்துள்ளது. அந்த ஆமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
சிங்காநல்லூர் குளக்கரையில் வலம் வந்த ஆமையை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பார்த்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com