பிரஸ் காலனி முருகன் கோயிலை பாதுகாக்கக் கோரி சாலை மறியல்

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலை பாதுகாக்கக் கோரி இந்து அமைப்புகள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதால் சிறிதுநேரம் போக்குவரத்து

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ் காலனியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலை பாதுகாக்கக் கோரி இந்து அமைப்புகள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டதால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையோரம் உள்ள பிரஸ் காலனியில் விநாயகர், பாலசுப்பிரமணியர் கோயில்கள் உள்ளன. இருவழிச் சாலையாக இருந்த இங்குள்ள சாலை தற்போது நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோயிலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்தனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டனர். இந்தச் சூழ்நிலையில் வீரபாண்டி பிரிவு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த பி.சிவசக்தி பாரதி, ஏ.சிங்காரமூர்த்தி ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் மீண்டும் அங்கு கோயிலை அமைக்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய உதவிஆய்வாளர் செல்வநாயகம் 
இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை. இதையடுத்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வடக்கு வட்டாட்சியர் மகேஷ்குமார், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.வி.என் ஜெயராமன், நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர்கள் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com