விளைநிலங்களைக் காக்க விவசாய சங்கத்தினர் புது முயற்சி

கோவையில், குடியிருப்புகளாக மாறும் விளைநிலைங்களை காப்போம் என்பதை வலியறுத்தி விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கோவையில், குடியிருப்புகளாக மாறும் விளைநிலைங்களை காப்போம் என்பதை வலியறுத்தி விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் தென்னை, நெல், திராட்சை, பாக்கு, காய்கறிகள், பூக்கள், பழவகை பயிர்கள் உள்பட அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பொருளாதாரத்தில் வேளாண் சாகுபடி முக்கியப் பங்கு வகிக்கிறது. 
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்றும் நிலை தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால் விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு கான்கிரீட் காடுகளாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. 
இதனால் விளைநிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதைக் கண்டித்தும், விதிகளை மீறு ஆழ்துளை கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய பாதுகாப்புச் சங்கம் சார்பில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. 
முதற்கட்டமாக தொண்டாமுத்தூர், நம்பியழகன்பாளையம், நாகராஜபுரம், வேடப்பட்டி மாகாளியம்மன் கோயில் உள்பட 4 இடங்களில் விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 
இது தொடர்பாக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஞானசுந்தரம் கூறியதாவது: சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து கட்டுமானங்களுக்கு தண்ணீர் எடுத்தல், பாசன வாய்க்கால்களில் கழிவுகளை கொட்டுதல், கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நிலத்தடி நீரை சேமிப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். தற்போது 4 இடங்களில் இதுகுறித்து விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று விழிப்புணர்வுப் பதாகைகள் வைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com