அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
By DIN | Published On : 19th July 2019 09:28 AM | Last Updated : 19th July 2019 09:29 AM | அ+அ அ- |

அன்னூர் அருகே உள்ள மேகிணறு பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள், லாரி உரிமையாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை சிறைபிடித்தனர்.
அன்னூர் அருகே உள்ள மேகிணறு பகுதி வழியாக அனுமதியின்றி லாரிகளில் கிராவல் மண் பல நாள்களாக கடத்தப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள், அன்னூர் வட்டார டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கிராவல் மண் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து வட்டாட்சியர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள் லாரியில் இருந்த அனுமதி கடிதத்தை ஆய்வு செய்தபோது அந்த கடிதம் கடந்த 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் லாரியை பறிமுதல் செய்து அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.