ரயிலில் அடிபட்டு பெண் பலி
By DIN | Published On : 19th July 2019 08:44 AM | Last Updated : 19th July 2019 08:44 AM | அ+அ அ- |

துடியலூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
துடியலூர் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு ஒரு பெண் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியே வந்த விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் ஆகிய விவரங்கள் தெரியவரவில்லை. இறந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.