தனியார் நிறுவனத்தில் மின் சாதனங்களை திருடியதாக 2 பேர் கைது
By DIN | Published On : 24th July 2019 08:42 AM | Last Updated : 24th July 2019 08:42 AM | அ+அ அ- |

சூலூர் அருகே தனியார் நிறுவனத்தில் மின்சாதனங்களைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர் .
இதுகுறித்து சூலூர் போலீஸார் கூறியதாவது:
கோவை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (43). இவர் சூலூர், முத்துகவுண்டன் புதூரில் மில் வைத்துள்ளார். இங்கு வைக்கப்பட்டிருந்த மோட்டார் மற்றும் அதன் உபகரணங்களை மர்ம நபர்கள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி திருடிச் சென்றனர். இதுகுறித்து ஜெயகுமார் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அரசூர் பகுதியில் இரும்புக் கடை நடத்தி வந்த சகோதரர்களான தூத்துக்குடி மாவட்டம், பால சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (37), ராஜ்குமார் (35) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், ஜெயகுமாரின் மில்லில் மோட்டார் மற்றும் உபகரணங்களைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.