Enable Javscript for better performance
அரசின் வருவாய்க்கு வருமான வரியே ஆதாரம்: வருமான வரித் துறை ஆணையர் பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    அரசின் வருவாய்க்கு வருமான வரியே ஆதாரம்: வருமான வரித் துறை ஆணையர் பேச்சு

    By DIN  |   Published on : 25th July 2019 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசின் முக்கிய வருமானமாக வருமான வரியே உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே  அரசின் அனைத்துத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக வருமான வரித் துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். 
    ஆண்டுதோறும் ஜூலை 24 ஆம் தேதி வருமான வரித் தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 159 ஆவது ஆண்டு வருமான வரித் தின விழா கோவை வருவமான வரி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி வருமான வரித் துறை அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற ரத்த தான முகாம் நடைபெற்றது.  
    வருமான வரித் துறை தலைமை ஆணையர் துர்கா சரண்தாஸ் ரத்த தான முகாமை தொடங்கிவைத்து பேசியதாவது: 
    இந்திய அரசின் முக்கிய வருமானமாக வருமான வரியே உள்ளது. இதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டே பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகள், உள்கட்டமைப்பு உள்பட அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. வருமான வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். வருமான வரித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் கோரிக்கைகள், குறைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இவை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு அளிக்கப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது என்றார்.  
    ரத்த தான முகாமில், வருமான வரித் துறை அலுவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர்  ரத்த தானம் செய்தனர். வருமான வரித் துறை ஆணையர் பென்னி ஜான், முதன்மை ஆணையர் ஜி.ஆர்.ரெட்டி, கூடுதல் ஆணையர் சுந்தரேசன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
    159 மரக்கன்றுகள் நடவு
    விழாவையொட்டி, கோவை குளங்கள் பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து வெள்ளலூர் குளக்கரையில் வருமான வரித் துறை அலுவலர்கள் சார்பில் 159 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai