Enable Javscript for better performance
கிணத்துக்காடு குட்டை தூர்வாரும் பணி: ஆட்சியர் துவக்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    கிணத்துக்காடு குட்டை தூர்வாரும் பணி: ஆட்சியர் துவக்கிவைத்தார்

    By DIN  |   Published on : 25th July 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர் அருகே கிட்டாம்பாளையத்தில் உள்ள கிணத்துக்காடு குட்டையை தூர்வாரும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. 
    மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளைத் துவக்கிவைத்தனர். 
    இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இந்தக் குட்டையில் தூர்வாரி எடுக்கப்படும் வண்டல் மண்ணை இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கே இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் பேசுகையில்,  மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, நீர் மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. நாம் அனைவரும் வீட்டின் அருகில் குறைந்தது 4 மரக்கன்றுகளையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்றார். 
    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜா, பொதுப் பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ்,  கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகம்,  அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு சங்க நிர்வாகி ரவிசந்திரன், சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai