Enable Javscript for better performance
கிருஷ்ணா கல்லூரியில் சி.ஏ. பயிற்சி வகுப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் ஆகியன இணைந்து சி.ஏ. பயிற்சி வகுப்பைத் தொடங்கியுள்ளது. 
    இக்கல்லூரியின் வணிகவியல் துறையின் புரஃபஷனல் அக்கவுண்டிங் பிரிவின் இளங்கலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தங்களின் படிப்பினிடையே இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் நடத்தும் ஃபவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் இண்டர்மிடியேட் கோர்ஸ் எழுத பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பை இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜி.ராமசாமி புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
    உலக பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியும் உலக அளவில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. விரைவில் இந்தியா, சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அடைய உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் வணிகவியல் மாணவர்கள் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது நம் நாட்டில் 3 லட்சத்துக்கும் மேலான பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர். நம் நாட்டில் பட்டயக் கணக்கு படித்தவர்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இப்படிப்பை புரிந்து படித்தால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும். ஜிஎஸ்டியின் காரணமாக பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன், முதல்வர் பி.பேபி ஷகிலா, பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai