Enable Javscript for better performance
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    By DIN  |   Published on : 25th July 2019 10:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில், தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் சார்பில் குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.
    தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டம் சார்பில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டியை பியூசன் மீடியா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து  தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் சார்பில் நடத்தப்பட்டது. 10, 5, 3 மற்றும் 1 கி.மீ. என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 
    மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் தொழில், கல்வித் துறையில் சிறந்து விளங்குகிறது. ஏழ்மை, சமூக சூழல்களை காரணம் காட்டி குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது கண்டிக்கத்தக்கது. 
    குழந்தைகள் கல்வி கற்பதுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தருகிறது. குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்புக்காக தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்டம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் எங்கு பணி அமர்த்தப்பட்டு இருந்தாலும் மத்திய அரசின் w‌w‌w.‌p‌e‌n​c‌i‌l.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையதளத்திலும், 0422-2305445 என்ற எண்ணிலும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் தெரிவிக்கலாம், என்றார். 
    நிகழ்ச்சியில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புத் திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார், திட்ட கள அலுவலர் நம்பிராஜன், பியூசன் மீடியா என்டர்டெய்ன்மெண்ட் நிர்வாக இயக்குநர் ஜீவிதா உள்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai