Enable Javscript for better performance
கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த துப்புரவுத் தொழிலாளி- Dinamani

சுடச்சுட

    

    கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த துப்புரவுத் தொழிலாளி

    By DIN  |   Published on : 25th July 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, காந்திபுரத்தில் கைகளால் சாக்கடையைச் சுத்தம் செய்த மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது. 
    கோவை மாநகராட்சியில் உள்ள வார்டுகளில், துப்புரவுத் தொழிலாளர்கள் பல்வேறு  குழுக்களாகப் பிரிந்து குப்பை அகற்றுதல், சாக்கடைகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
    இப்பணிகளில் ஈடுபட துப்பரவுத் தொழிலாளர்களுக்கு கையுறை, சாக்கடை அகற்றும் கருவி உள்ளிட்ட உபகரணங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது. இந்நிலையில், காந்திபுரம் 100 அடி சாலை 7 ஆவது வீதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை, மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளி மணிமாறன் எவ்வித உபகரணங்களும் இல்லாமல் தனது  கையால் புதன்கிழமை காலை சுத்தம் செய்தார். இதை அவ்வழியாகச் சென்ற சிலர், தங்களின் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். இதைப் பார்த்து மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பந்தப்பட்ட துப்புரவுத் தொழிலாளியை அழைத்து, கைகளால் சாக்கடைக் கழிவுகளை அள்ளக் கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai