Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய இந்தப் பேரணியை, போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர்( கிழக்கு) 
    கொடிச்செல்வன் கொடியசைத்துத் துவங்கி வைத்தார். கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை சிங்காநல்லூர் தனியார் பள்ளி அருகே தொடங்கிய பேரணி, சௌரிபாளையம், உடையாம்பாளையம் பிரிவு, புனித தோமையார் தேவாலயம் வழியாக மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடைந்தது. 
    இப்பேரணியில், வாகன விற்பனை முகவர்களின் பிரதிநிதிகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரணி சென்ற பகுதியில் உள்ள மக்களுக்கு, ஹெல்மெட் மற்றும் இருக்கை பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளைப் பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai