Enable Javscript for better performance
தாசம்பாளையத்தில்  வாழைகளை சேதப்படுத்திய யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    தாசம்பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் இரவு நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து, வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
    மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையம் கிராமத்தில்  100 ஏக்கருக்கு மேல் வாழை, தென்னை பயிரிடப்பட்டுள்ளது.  
    கடந்த ஒரு மாத காலமாக அருகிலுள்ள நெல்லிமலைப் பகுதியிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக அருகிலுள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதம் செய்து வருகின்றன. 
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ராஜன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2,000 வாழை மரங்கள், பத்து தென்னை மரங்களை சேதப்படுத்தின. 
    அருகிலுள்ள சின்னராஜ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 5,000 வாழைகள், பத்து தென்னை மரங்களையும் யானைகள் சேதப்படுத்தின.  எனவே, வனத் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வனப் பகுதியை ஒட்டி அகழிகளை வெட்டி யானைகள் வனப் பகுதியிலிருந்து வெளிவராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai