Enable Javscript for better performance
பெ.நா.பாளையத்தில் 861 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்- Dinamani

சுடச்சுட

    

    பெ.நா.பாளையத்தில் 861 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

    By DIN  |   Published on : 25th July 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம்- சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 861 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள்  புதன்கிழமை வழங்கப்பட்டன.
    ரங்கசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு கோவை மாவட்டக் கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வனிதாமணி வரவேற்றார். 
    சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி கலந்துகொண்டு 304 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
    சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் 557 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். விழாவில் பள்ளியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர், தலைமை ஆசிரியர் பரமசிவம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கதிரவ மூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் எல்.என்.தனபால், வி.ரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai