Enable Javscript for better performance
போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் 120 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு: மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் 120 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு: மாநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்

    By DIN  |   Published on : 25th July 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போத்தனூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 120 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நோக்கில் கோவை, அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சிக்னல், அண்ணா சிலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் துறை பொருத்தியுள்ளது. 
    இதன்மூலம் விதிகளை மீறுபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி ரூ.5 லட்சத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல நகரில் குற்றச்சம்பவங்களைக் குறைக்கவும், தடுக்கவும் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்படும் என்று மாநகர போலீஸார் அறிவித்திருந்தனர். 
    இதன்படி குடியிருப்போர் நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை அமைந்திருந்தனர். இவை அனைத்தும் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள நவீன கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சாய்பாபா காலனி, காட்டூர் பகுதிகளில் இதுபோன்ற கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன.
    இந்நிலையில் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 120 கண்காணிப்பு கேமராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் நிகழ்ச்சி மற்றும் புறக்காவல் நிலையத்தின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.  இவற்றைத் தொடங்கிவைத்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பேசியதாவது:
    கோவை நகரம் 25 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் இங்கு பணியில் உள்ளனர். இவர்களால் அனைத்துப் பகுதிகளிலும் நடக்கும் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்க முடியாது. இதுபோன்ற நேரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் காவலர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. நகரின் முக்கியமான பகுதிகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் பொருத்தப்படும் என்றார். 
    நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன் (சட்டம், ஒழுங்கு) பெருமாள் (குற்றப்பிரிவு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai