Enable Javscript for better performance
மாநகராட்சி சார்பில் குறை கேட்புக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 4 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
    கோவை மாநகராட்சியில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாநகராட்சித் துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி  தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாநகரின் பல்வேறு வார்டுகளைச் சேர்ந்த மக்கள் தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்கள் அளித்தனர். 
    மொத்தம் 93 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்த துணை ஆணையர்  பிரசன்ன ராமசாமி மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பெயர் திருத்தச் சான்றிதழ் வழங்கவும்,  2 பேர் அளித்த மனுவின்படி, 2 இடங்களில் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றவும் உத்தரவிட்டார். 
    இதில், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் ரவி, சரவணன், அண்ணாதுரை, செந்தில்குமார் ரத்தினம், செல்வன், மகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai