Enable Javscript for better performance
மாநில அளவிலான யோகாசன போட்டிக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையம் வாராஹி மந்திராலயத்தில் உள்ள வாராஹி மிஸ்டிக் யோகா அமைப்பு சார்பில் நடத்தப்பட உள்ள மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளில் கலந்துகொள்ள போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து இதன் நிர்வாகி வாராஹி மணிகண்ட சுவாமிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    கோவை- சிங்காநல்லூரிலுள்ள பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 13 ஆவது மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் 6 வகைப் பிரிவுகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்வோர் பங்கேற்கலாம். 
    7 ஆம் வகைப் பிரிவில் 18 முதல் 21 ஆம் வயது வரையுள்ள-  பாலிடெக்னிக், கல்லூரிகளில் படிப்போர் கலந்துகொள்ளலாம். 8 ஆம் வகைப் பிரிவில் 22 வயது முதல் 25 வயது வரையுள்ள மற்றும் கல்லூரிகளில் படிப்போர் பங்கேற்கலாம். 
    இருபாலரும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் தகவல்கள் பெறவும், பெயர்களைப் பதிவு செய்யவும் 92444 21389 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai