Enable Javscript for better performance
யானைகள் தாக்கி குடியிருப்புகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் அங்குள்ள 2 வீடுகளை சேதப்படுத்தின.
    வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் 5 ஆவது டிவிஷன் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு யானைகள் கூட்டமாக வந்துள்ளன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற யானைகள், அங்குள்ள பெருமாள், மாடசாமி ஆகிய  தொழிலாளர்களின் வீடுகளைத் தாக்கி சேதப்படுத்தின. நீண்ட நேரத்திற்குப் பின் யானைகள் அப்பகுதியை விட்டுச் சென்றன.  வேட்டைத் தடுப்புக் காவலர்கள் தற்போது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் யானைகளை விரட்ட முடியாத நிலை எஸ்டேட் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai