Enable Javscript for better performance
ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சித்தால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூபொதுச் செயலாளர் பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வே துறையை தனியார்மயமாக்க முயற்சித்தால் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூபொதுச் செயலாளர் பேட்டி

    By DIN  |   Published on : 25th July 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை மேற்கொண்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென்னக ரயில்வே  மஸ்தூர் சங்க பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்தார். 
    ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, கோவை குட்ஷெட் சாலையில் உள்ள பணிமனையில் சேலம் கோட்ட தென்னக ரயில்வே  மஸ்தூர் சங்கம் (எஸ்.ஆர்.எம்.யூ) சார்பில் கண்டனக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். 
    அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
    சென்னை - கோவை, சென்னை - மதுரை வழித்தடத்தில் இயங்கி வருகின்ற சில விரைவு ரயில்களை தனியார் வசம் வழங்கிட ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.  ரயில் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால், ரயில் கட்டணம் இரட்டிப்பாகி பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும், தென்னக ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். பலதரப்பினரின் எதிர்ப்பை மீறி ரயில்வே துறையைத் தனியாருக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும். விமானக் கட்டணம் அதிகமாக இருப்பதால், மக்கள் விமான பயணத்தை எவ்வாறு புறக்கணித்துள்ளனரோ, அதேபோல், ரயில்வே துறை தனியார்மயமானால், ரயில் கட்டணம் அதிகரித்து, மக்கள் ரயில்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்படும். இச்சூழல் நடைபெறாமல் தடுக்க ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai