Enable Javscript for better performance
வால்பாறையில் கனமழை: தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்கும் பணி பாதிப்படைந்து வருகிறது.
    வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதில் சில தினங்களாக இடைவிடாது கனமழை பெய்கிறது. 
    தொடர் மழை காரணமாக தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணியாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தேயிலைச் செடிகளுக்கு இடையே மழைநீர் வடிந்து வருவதால் தொழிலாளர்களால் இலைகள் பறிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 
    இதேபோல பறிக்கப்பட்ட இலைகள் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதிலும் தொய்வு ஏற்பட்டிருப்பதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai