முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அரசுப் பள்ளியில் புதிய கலையரங்கம் திறப்பு
By DIN | Published On : 30th July 2019 08:24 AM | Last Updated : 30th July 2019 08:24 AM | அ+அ அ- |

அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கலையரங்க கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
வி.பி.எஸ்.நாதன் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடத் திறப்பு விழாவுக்கு எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.கீதா தலைமை வகித்தார். வி.பி.எஸ். நாதன் அறக்கட்டளைத் தலைவர் சபாபதி, செயலாளர் வேலுசாமி, பொருளாளர் ஹரிமோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சாரதாமணி வரவேற்றார். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கலையரங்கத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.