முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
திமுக பிரமுகர் கொலை வழக்கு: பொள்ளாச்சி நீதிமன்றத்தில் இரு இளைஞர்கள் சரண்
By DIN | Published On : 30th July 2019 08:26 AM | Last Updated : 30th July 2019 08:26 AM | அ+அ அ- |

தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில் இரு இளைஞர்கள் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலையன்கரிசலைச் சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன் (55). திமுக செயற்குழு உறுப்பினரான இவர், தூத்துக்குடி அனல் மின்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒப்பந்தப் பணிகளையும் செய்து வந்தார்.
இவர் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. குலையன்கரிசலில் உள்ள தனது தோட்டத்துக்கு கடந்த 22ஆம் தேதி சென்றுவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த கும்பல் ஒன்று கருணாகரனை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கருணாகரன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குலையன்கரிசலைச் சேர்ந்த சரவணன் (27), சக்திவேல் (20) ஆகியோர் திங்கள்கிழமை சரணடைந்தனர். அவர்களை வரும் 2ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.