முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வங்கியில் பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம் பழுது: வாடிக்கையாளர்கள் அவதி
By DIN | Published On : 30th July 2019 08:23 AM | Last Updated : 30th July 2019 08:23 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம், எல்.எம்.டபிள்யு பிரிவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் இ-மையத்தில் வங்கி பாஸ் புத்தகத்தில் பதிவுசெய்யும் தானியங்கி இயந்திரம் கடந்த ஒரு வாரமாக பழுதடைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த வங்கிக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இதில் வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்கள் பாஸ் புத்தகத்தில் கணக்கு பரிவர்த்தனை விவரங்களை அறிந்து கொள்வதற்காக இங்குள்ள தானியங்கி பிரிண்டிங் இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த இது கடந்த ஒரு வாரமாக பழுதாகிக் கிடக்கிறது. இதனால் வங்கி அலுவலர்களிடம் சென்று கேட்டால், பழுதடைந்த இயந்திரத்தை காண்பித்து அனுப்புகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே இந்த இயந்திரத்தை சரி செய்து தர வங்கியின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.