இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் உயிரிழப்பு
By DIN | Published On : 31st July 2019 09:27 AM | Last Updated : 31st July 2019 09:27 AM | அ+அ அ- |

சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மெக்கானிக் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (54). கார் மெக்கானிக். இவர் சூலூரை அடுத்த கரையாம் பிரிவு அருகே அவினாசி சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சூலூர் போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.