Enable Javscript for better performance
12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்  5 மாதத்தில் பறிமுதல்: ரூ. 11.84  லட்சம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    12 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்  5 மாதத்தில் பறிமுதல்: ரூ. 11.84  லட்சம் அபராதம் வசூல்

    By DIN  |   Published on : 01st June 2019 08:51 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை மாநகரப் பகுதிகளில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை 5 மாதங்களில் 11 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 11லட்சத்து 84 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. தடையை மீறி பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 
    இதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கடைகள், வியாபார நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட  5 மண்டலங்களில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் மே 29 ஆம் தேதி வரை வடக்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 930 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு 835 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ. 4 லட்சத்து 22 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    தெற்கு மண்டலத்தில் 2 ஆயிரத்து 763 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, 3 ஆயிரத்து 724 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 
    ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 3 ஆயிரத்து 109 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, 5 ஆயிரத்து 518 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    மேற்கு மண்டலத்தில் 8 ஆயிரத்து 212 இடங்களில்  ஆய்வு நடத்தப்பட்டு, 1,332 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து 750 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    மத்திய மண்டலத்தில் 2 ஆயிரத்து 851 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு 645 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 260 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தமாக 5 மண்டலங்களிலும் ஜனவரி 1 முதல் மே 29-ஆம் தேதி வரை 19ஆயிரத்து 865 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு, 12 ஆயிரத்து 54 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.11லட்சத்து 84 ஆயிரத்து 10 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp