வாழைத்தோட்டம் ஆற்றைத் தூர்வாரும் பணி: சொந்த செலவில் செய்கிறார் பொள்ளாச்சி எம்.பி.

பல ஆண்டுகளுக்குப் பின் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றைத் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின் வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றைத் தூர்வாரும் பணி துவங்கியுள்ளது. இப்பணியை பொள்ளாச்சி எம்.பி. தன் சொந்த செலவில் மேற்கொள்கிறார்.
வால்பாறை, வாழைத்தோட்டம் ஆற்றோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது இப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்குள்  தண்ணீர் புகுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த ஆற்றைத் தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே தேர்தலுக்கு முன்பு அப்பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வெற்றிக்குப் பின் முதல் பணியாக ஆற்றைத் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, வாழைத்தோட்டம் ஆற்றோரப் பகுதியில் தூர்வாரும் பணியை பொள்ளாச்சி எம்.பி. கு.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மழைக்கு முன்பாக வாழைத்தோட்டம் ஆற்றைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த வாரம் நகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் வழங்கியிருந்தேன். ஆனால் கோரிக்கை மீது எந்த ஒரு நடவடிக்கையையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால் வாழைத்தோட்டம் பகுதி மக்கள் நலன் கருதி எனது சொந்த செலவில் மூன்று பொக்லைன் இயந்திரங்களை பொள்ளாச்சியில் இருந்து வரவழைத்து தற்போது தூர்வாரும்  பணியைத் துவக்கியுள்ளேன்.
இப்பணியை மேற்கொள்ள உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு மீண்டும்  கடிதம் வழங்கியுள்ளேன். இப்பணியை மேற்கொள்ள அதிகாரிகள் தவறும் பட்சத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.
திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com