"மாணவி இறப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை காரணமில்லை'

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை காரணமில்லை என சித்தி மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செளந்தர்ராஜன் தெரிவித்தார்.

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை காரணமில்லை என சித்தி மருத்துவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செளந்தர்ராஜன் தெரிவித்தார்.
கோவையில் சித்த மருத்துவரின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்ததாக திங்கள்கிழமை அவரது உறவினரிகள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளித்த கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் குருநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாணவியின் பெற்றோர், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரணிடம் புகார் அளித்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பதிவு பெற்ற சித்த மருத்துவர்கள் சங்கம் சார்பில் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் தொழிலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
பின்னர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செளந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் சித்த மருத்துவர் குருநாதனின் தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி உயிரிழந்தார் என்ற தவறான தகவலை அவரது உறவினர்கள் பரப்பி வருகின்றனர். இவர் 60 ஆண்டுகளாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உயிரிழந்த கல்லூரி மாணவிக்கு மாதவிடாய் பிரச்னை ஏற்பட்டு பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில்தான் சித்த மருவத்துவர் குருநாதனிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். சித்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. கல்லூரி மாணவி இறப்புக்கு சித்த மருத்துவ சிகிச்சை காரணமில்லை. சித்த மருத்துவத்தின் மீது கலங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சித்த மருத்துவ தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், மாணவி சத்ய பிரியாவின் இறப்புக்கு  காரணமானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com