Enable Javscript for better performance
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்: கல்வி- Dinamani

சுடச்சுட

    

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: தனியார் பள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்: கல்வி அலுவலகத்தில் திடீர் தர்னா

    By DIN  |   Published on : 21st June 2019 10:02 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் செயல்படும் சில தனியார் பள்ளிகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை சிதைக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினரும், மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர்.
    பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, பொள்ளாச்சி, மகாலிங்கபுரத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கான குலுக்கல் ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பள்ளியில் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இதில் 6 மாணவ-மாணவிகளை மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறி குலுக்கலில் அவர்களது பெயர்களைப் போடாமல் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக அவர்களது விண்ணப்பங்களை தனியாக வைத்துக் கொண்டது.
    வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் என்றால் அதற்கான உரிய சான்றிதழ்களை, குலுக்கலை மேற்பார்வையிட வந்த அரசு அலுவலர் சரிபார்த்து ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை. இதையடுத்து, 9 மாணவர்கள் மட்டுமே குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம், இந்த பள்ளி நிர்வாகத்தால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவு என்று தேர்வு செய்யப்பட்ட ஒரு மாணவியின் பெயர், பொள்ளாச்சியில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பள்ளியில் அம்மாணவி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் நிலையிலும் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கல்வி அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    அதேபோல், மற்றொரு பள்ளியில் 10 மாணவர்களைத் தேர்வு செய்வதற்கு பதிலாக 4 பேர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். இதற்கிடையே, மனு அளிக்க வந்தவர்கள், தகுதியான மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்வி அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    அதிகாரிகளிடம் மனு அளித்த ஒரு மாணவருக்கு உடனடியாக இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    மேலும், முதன்மைக் கல்வி அலுவலரிடம் பேசி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp