Enable Javscript for better performance
பொலிவுறு நகரத்துக்கான விருது: கோவை மாநகராட்சி சார்பில் 2 ஆவது அறிக்கை சமர்ப்பிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொலிவுறு நகரத்துக்கான விருது: கோவை மாநகராட்சி சார்பில்  2 ஆவது அறிக்கை சமர்ப்பிப்பு

    By DIN  |   Published on : 21st June 2019 10:01 AM  |   அ+அ அ-   |    |  

    பொலிவுறு நகரம் விருதுக்கான போட்டிக்கு கோவை மாநகராட்சி சார்பில் இரண்டாவது அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
    மத்திய நகர்புறத் துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பொலிவுறு நகரத்துக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், முன்னோடி நகர உத்திகள், திட்டங்கள், சிறப்பான யோசனைகள் ஆகியவற்றில் புதுமை படைத்தல், துல்லியமான செயல்பாடுகளால் ஈர்த்தல் மற்றும் சுத்தம், சுகாதாரம், நகரக் கட்டமைப்பு, தண்ணீர் மேலாண்மையில் சிறந்து விளங்குதல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள்அடிப்படையில்  பொலிவுறு நகரங்கள் வரிசைப்படுத்ப்பட்டு, அனைத்திலும் சிறந்து விளங்கும் நகரத்துக்கு   விருது வழங்கப்படும்.
    2019 ஆம் ஆண்டு பொலிவுறு நகரத்துக்கான போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக நகரங்களான சென்னை, கோவை உள்பட இந்தியாவின் 33 நகரங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொலிவுறு நகரம் மேம்பாட்டுக்கான திட்டங்கள் அடங்கிய தங்களது முதல் அறிக்கையை சமர்ப்பித்தன.
    இந்நிலையில், மே 15 ஆம் தேதிக்குள் இரண்டாவது அறிக்கை சமர்ப்பிக்க  மத்திய நகர்புறத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய 2 நகரங்கள் மட்டுமே இந்த இரண்டாம் அறிக்கையை சமர்பித்துள்ளன.  மத்திய நகர்புறத் துறை அமைச்சகம் சார்பில் ஜூன் 25 ஆம் தேதி பொலிவுறு நகரத்துக்கான விருது அறிவிக்கப்படவுள்ளது.
    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "பொலிவுறு நகரம் திட்ட அறிக்கை தொடர்பான விண்ணப்பம் சமர்ப்பிப்பது மிக கடினமானது. விண்னப்பத்துடன், பல ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டி உள்ளதால், இது நுணுக்கமான, சவாலான பணி ஆகும்.
    மாநகராட்சி அலுவலர்கள் திறமையாகப் பணியாற்றி இரண்டாம் சுற்றை நிறைவு செய்துள்ளோம். 2019 ஆம் ஆண்டுக்கான விருது கிடைக்க கோவைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp