Enable Javscript for better performance
70% மூத்த குடிமக்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கின்றனர்: ஹெல்ப் ஏஜ் நிறுவன ஆய்வில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    70% மூத்த குடிமக்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கின்றனர்: ஹெல்ப் ஏஜ் நிறுவன ஆய்வில் தகவல்

    By DIN  |   Published on : 21st June 2019 10:08 AM  |   அ+அ அ-   |    |  

    இந்தியாவில் உள்ள 70 சதவீத முதியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    முதியவர்களை கண்ணியத்துடன் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் இந்தியாவில் தற்போது முதியவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவர்களை பாதுகாப்பதில் உள்ள சவால்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
    கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில்  ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் கோவைக் கிளை ஒருங்கிணைப்பாளர் அனிதா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் பேபி ஷகிலா இந்த ஆய்வறிக்கை புதன்கிழமை வெளியிட கல்லூரியின் சமூகப் பணித் துறைத் தலைவர் அழகர்சாமி பெற்றுக் கொண்டார்.
    இந்த அறிக்கை குறித்து ஒருங்கிணைப்பாளர் அனிதா பேசும்போது, இந்தியாவில் 35 சதவீதம் குடும்பத்தினர் பெரியவர்களை நன்கு கவனித்து வந்தாலும் அதை, அவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.
    மேலும், 25.7 சதவீதம் பேர்கள் பெரியவர்களை சரியாக கவனித்தாலும், அதனால் சோர்வு, விரக்தியுடன் காணப்படுகின்றனர். 29 சதவீத குடும்பத்தினர் தங்களின் வீட்டில் உள்ள முதியவர்களை, முதியோர் இல்லங்களில் சேர்க்கவே  நினைக்கின்றனர்.
    அதேநேரம்,  வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கு உடல்ரீதியான பாதுகாப்பு வசதிகளை செய்வதிலும், நடமாடுவது, குளிப்பது, கழிவறை செல்வது, துணி மாற்றுவது, உணவு அளிப்பது எனப் பல வழிகளிலும் 32 சதவீதத்தினர் உதவி வருகின்றனர். இந்த உதவியை வீட்டில் உள்ள ஆண்களை விட பெண்களே அதிகம் செய்கின்றனர்.
    குடும்பத்தில் 68 சதவீத மருமகள்கள், முதியவர்களுக்கு செல்லிடப்பேசியில் பேசவும், கடைகளுக்கு அழைத்துச் செல்லவும், உணவு தயாரிக்கவும், துணி துவைக்கவும், மருந்து கொடுப்பதிலும் பெரிதும் உதவி வருகின்றனர்.
    இந்த விஷயத்தில் மகன்கள் 51 சதவீதம் பேர்கள் மட்டும் பெரியவர்களுக்கு உதவி செய்கின்றனர். நாட்டில் 39 சதவீத முதியவர்கள் வருமானமின்றி குடும்ப உறுப்பினர்களைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
    இந்திய குடும்பங்களில் முதியவர்களுக்காக சராசரியாக மாதம் ரூ. 4,125 செலவிடப்படுகிறது. 42.5 சதவீதம் குடும்பத்தினர் பெரியவர்களின் மருத்துவ செலவுக்கு பணம் வழங்குகின்றனர்.
    மூத்த குடிமக்களில் 57 சதவீதம் பேர்கள் தங்களது மகன்களிடம் இருந்தும், 23 சதவீதம் பேர் மருமகள்களிடம் இருந்தும் தங்களின் செலவுக்கு பணம் பெற்று வருகின்றனர்.
    மொத்தம் 70 சதவீத முதியவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து அன்பையும், உணர்வுப்பூர்வமான ஆதரவையும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், பெரும்பாலான குடும்பத்தினர் தங்களின் வீட்டில் உள்ள வயதானவர்களைப் பாதுகாக்க அரசிடம் இருந்து மலிவு விலையில் மருத்துவ வசதி, மருந்துகள், மருத்துவத்துக்கான வாகன வசதி, அரசு உதவியுடன் முதியோர் இல்லம், இலவச மருத்துவ அட்டை, காப்பீடுத் திட்டங்களை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
    இதைத் தொடர்ந்து, தங்களது குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு அன்பும், மரியாதையும் கொடுத்து அரவணைப்போம் என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp