பொறியியல் ஆன்லைன் கவுன்சலிங்: கோவையில் நாளை விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 25th June 2019 09:02 AM | Last Updated : 25th June 2019 09:02 AM | அ+அ அ- |

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு இலவச கருத்தரங்கு கோவையில் புதன்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில், கோவை அவிநாசி சாலையில் உள்ள விஜய் எலான்சா ஹோட்டலில் காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், செயலர் பி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், ஐ.சி.டி. அகாதெமியின் துணைத் தலைவர் பி.அன்புத்தம்பி, கே7 கம்ப்யூட்டிங் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் கே.புருஷோத்தமன், நாஸ்காம் பொது மேலாளர் உதய சங்கர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் சிவகுமார் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொறியியல் மாணவர் சேர்க்கை, பொறியியல் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விளக்க உள்ளனர்.
இந்த கருத்தரங்கில் பிளஸ் 2 முடித்துள்ள மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 044 - 48647444 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.