வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு
By DIN | Published On : 25th June 2019 09:03 AM | Last Updated : 25th June 2019 09:03 AM | அ+அ அ- |

வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் கோடை விடுமுறை சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இந்த ஆண்டு கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர்.
வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சில சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனிடையே தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.