சுடச்சுட

  

  காதல் விவகாரத்தில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்: காதலி மருத்துவமனையில் அனுமதி

  By DIN  |   Published on : 26th June 2019 07:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டுப்பாளையத்தில் காதலியுடன் வந்த தம்பியை அண்ணன் அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்தார். காதலி ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ஸ்ரீரங்கராயன் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கனகராஜ் (22). இவரது அண்ணன் வினோத்குமார் (24), தம்பி கார்த்தி. இவர்கள் மூவரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள். 
   இந்நிலையில் கனகராஜ், வெள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகள் வர்ஷினி பிரியா (16) என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கனகராஜ், வர்ஷினி பிரியாவை திருமணம் செய்து கொள்ள இருவரது வீட்டிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனராம்.
   இந்நிலையில் கடந்த வாரம் பெண்ணின் வீட்டில் இவர்களின் காதல் விவகாரத்தால் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வர்ஷினி பிரியா கனகராஜ் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது கனகராஜன் குடும்பத்தினர் வர்ஷினி பிரியாவை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வந்தனராம்.
   ஆனால் அங்கு மீண்டும் தகராறு ஏற்பட்டு வர்ஷினி பிரியா செவ்வாய்க்கிழமை கனகராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். கனகராஜின் அண்ணன் வினோத் குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வினோத்குமார் அரிவாளால் கனகராஜ், வர்ஷினி பிரியா ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    பலத்த காயமடைந்த வர்ஷினி பிரியாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து, வினோத்குமாரைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீஸார் அங்கு சென்று கனகராஜின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வர்ஷினி பிரியாவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வர்ஷினி பிரியா அனுப்பி வைக்கப்பட்டார்.
   இதுகுறித்து வழக்குப்பதிந்து வினோத்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai