சுடச்சுட

  

  பொள்ளாச்சி அருகே சாலையோர சுவர் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
   பொள்ளாச்சியில் இருந்து கரட்டுமடத்துக்கு 20-க்கும் அதிகமான பயணிகளுடன் தனியார் பேருந்து  திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. கூலநாயக்கன்பட்டி அருகே சென்றபோது, சாலையோரத்தில் இருந்த சுவர் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த கூலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பகவதி (34), கோலார்பட்டியைச் சேர்ந்த பரந்தாமன் (15), சமத்தூரைச் சேர்ந்த பழனியம்மாள் (65), லட்சுமாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (39) ஆகியோர் காயமடைந்தனர்.
   அவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரான பனைமரத்துப்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டனிடம், கோமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai