சுடச்சுட

    

    பார்வைத்திறன் குறைபாடு  உடையவர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை  

    By DIN  |   Published on : 26th June 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, தொண்டாமுத்தூரில் செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 
    இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டாரம், உலியம்பாளையத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் பார்வைத் திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இங்கு  உணவு, சீருடை, தங்குமிடம் அனைத்தும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 
    பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வியுடன் இசை, கணினி, யோகா, விளையாட்டு உள்ளிட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, கோவை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளை அரசு பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai