சுடச்சுட

  

  விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை  

  By DIN  |   Published on : 26th June 2019 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வால்பாறை பகுதியில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆம்னி, தனியார் வேன்களின் உரிமங்கள் ரத்து செய்து அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  வால்பாறை பகுதியில் ஆம்னி வேன்களில் விதிமுறைக்கு மாறாக அதிக அளவில் ஆள்கள், பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
   இந்நிலையில் பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி வால்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
  வாகனச் சோதனையில் அதிக அளவில் ஆள்களை ஏற்றியும், முறையான உரிமம் இன்றியும் இயக்கப்பட்ட 7 ஆம்னி வேன்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வருங்காலத்தில் விதி மீறி இயக்கப்படும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai