சீரமைக்கப்பட்ட குட்டைகளில் தேங்கிய மழை நீர்

மதுக்கரை, மரப்பாலம் பகுதி மலை மேல் உள்ள குட்டை தூய்மைப்படுத்தப்பட்டதால் அதில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது.

மதுக்கரை, மரப்பாலம் பகுதி மலை மேல் உள்ள குட்டை தூய்மைப்படுத்தப்பட்டதால் அதில் தற்போது மழை நீர் தேங்கியுள்ளது.
மரப்பாலம், தர்மலிங்கேசுவரர் கோயில் அருகே உள்ளது ராசிப்பாறை மலை. இந்த மலை உச்சியில் இயற்கையாக உருவான மழைநீர் தேங்கும் இரு குட்டைகள் உள்ளன. வன விலங்குகளுக்கு குடிநீராதாரமாக விளங்கும் இந்தக் குட்டைகள் வறண்டு காணப்பட்டன. மேலும் இக்குட்டைகளானது கற்கள், மணலால் மூடிக் கிடந்தன.
இந்நிலையில் மரப்பாலம் நீர்நிலைப் பாதுகாப்புக் குழுவினர் இந்தக் குட்டைகளை கடந்த மே 14ஆம் தேதி  தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மதுக்கரை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் இக்குட்டைகளில் மழை நீர் நிரம்பியுள்ளது.
 இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள இதர நீர்நிலைகளையும் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளதாக மரப்பாலம் நீர்நிலைப் பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com