வரதட்சிணைப் புகார்: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 02nd March 2019 09:27 AM | Last Updated : 02nd March 2019 09:27 AM | அ+அ அ- |

கோவை அருகே வரதட்சணைக் கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 4 பேர் மீது மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதா (24). இவருக்கும் சூலூர், கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரதட்சணைக் கேட்டு கணவர் தங்கராஜ், அவரது தாயார் ருக்மணி, தங்கை தங்கமணி, அவரது கணவர் சுந்ததரராஜ் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக ஹிரிஹரசுதா துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.