Enable Javscript for better performance
அரசுப் பேருந்தின் மீது டயர் ஏற்றும்போது கயிறு அறுந்து விபத்து: பணிமனை ஊழியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்தின் மீது டயர் ஏற்றும்போது கயிறு அறுந்து விபத்து: பணிமனை ஊழியர் சாவு

    By DIN  |   Published on : 11th March 2019 03:50 AM  |   அ+அ அ-   |    |  


    அரசுப் பேருந்தின் மீது மாற்று டயர் ஏற்றும்போது கயிறு அறுந்ததால் கீழே விழுந்த பணிமனை ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
     கோவை மாவட்டம், காரமடை சேரன் காலனியைச் சேர்ந்தவர் கணபதி (52). இவர் உக்கடம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பணிமனையில் இருந்து கணபதி உள்ளிட்ட 6 ஊழியர்கள் இணைந்து பேருந்துகளில் மாற்று டயர்களை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
     இதற்காக கணபதி மற்றும் இருவர் பேருந்தின் மீது நின்று கொண்டு கயிறு கட்டி டயர்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு அறுந்ததால் பேருந்தின் மீது நின்றிருந்த கணபதி நிலைதடுமாறி பின்பக்கமாக விழுந்தார்.
     இதில் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது கணபதியின் தலை மோதியதில் மயங்கினார். இதையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்தில் கணபதி உயிரிழந்தார். இதுகுறித்து உக்கடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     புதியப் பேருந்துகளில் மாற்று டயர்களை பேருந்தின் கீழ்பகுதியில் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பழையப் பேருந்துகளில் கிரேன் உதவியுடன் தான் மாற்று டயர்களை ஏற்ற வேண்டியுள்ளது.
     ஆனால், கணபதி பணியாற்றிய பணிமனையில் கிரேன் வசதி இல்லை. மேலும், மாற்று டயர்கள் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய கயிறு பழையதாக இருந்ததால் அதற்கு மாற்றாக புதிய கயறு வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
     இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டல மேலாண்மை இயக்குநர் ஆர்.முத்துக்கிருஷ்ணன் கூறுகையில், உயிரிழந்த கணபதிக்கு பேருந்துகளில் மாற்று டயர் ஏற்றும் பணி வழங்கப்படவில்லை. அவர் தனது சக ஊழியர்களுக்கு உதவ தானாகவே பணியில் ஈடுபட்டுள்ளார். 
    இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட பணிமனையில் மாற்று டயர்கள் ஏற்றுவதற்காக விரைவில் கிரேன் வழங்கப்படும் என்றார்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp