Enable Javscript for better performance
மாவட்டத்தில் 4.82 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் 4.82 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

    By DIN  |   Published on : 11th March 2019 03:50 AM  |   அ+அ அ-   |    |  


    கோவை மாவட்டத்தில் 4.82 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
    தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 
    கோவை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 370 மையங்கள், கிராமப்புறங்களில் 1,202 மையங்கள் என மொத்தம் 1,581 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தவிர்த்து பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளை தேர்வு செய்து 34 மையங்களும், 24 நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.
    இதன்மூலம் மாவட்டத்தில், 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
    இதில் 3.24 லட்சம் ( 97.3 சதவீதம்) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 
    இதில் சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என 6 ஆயிரத்து 324 பேர் ஈடுபட்டிருந்தனர். காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மையங்களில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் செளந்திரவேல், சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    மாநகராட்சியில் 339 மையங்கள்: கோவை மாநகராட்சியில் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 60 ஆயிரத்து 781 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
    இதற்காக மாநகராட்சியில் உள்ள 32 நகர்நல மையங்கள், 129 சத்துணவு கூடங்கள், 49 பள்ளிகள், ரயில் நிலையம், 5 பேருந்து நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், 5 நடமாடும் மையங்கள் சேர்த்து 339 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
    இதில் 212 சுகாதார பணியாளர்கள், 455 சத்துணவு பணியாளர்கள், 678 செவிலிய மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சேர்த்த 1,345 பேர் ஈடுபட்டிருந்தனர். சொட்டு மருந்து வழங்கும் முகாமைக் கண்காணிக்க 45 மருத்தவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். சீதாலட்சுமி நகர்நல மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை மாநகராட்சி ஆணையர்  ஷ்ரவண்குமார் ஜடாவத் தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    இந்த முகாமில் மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 248 குழந்தைகளுக்கு (98.4 சதவீதம்)  வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ஊரகம், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் விடுபட்ட குழந்தைகளுக்கு இன்றும், நாளையும் வீடு, வீடாக சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ஈஷாவில் போலியோ முகாம்: கோவை, பூலவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஈஷா யோக மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. ஈஷா யோக மையத்தின் உதவியுடன் முள்ளங்காடு, மடக்காடு, தாணிக்கண்டி, பட்டியார் கோவில்பதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் வழங்கப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
    அன்னூரில்...: அன்னூர் ஒன்றியத்தில் 87 மையங்களில் நடைபெற்ற முகாமில் 10,770 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp