சுடச்சுட

    

    இரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: திமுக பிரமுகர் மகன் கைது

    By DIN  |   Published on : 17th March 2019 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    இரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வால்பாறை திமுக பிரமுகர் மகனை போலீஸார் போக்úஸா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
     கோவை மாவட்டம், வால்பாறை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரவி (எ) ரவிச்சந்திரன். இவர் திமுக கோவை மாவட்ட ஆதிதிராவிட பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார்.
     இவரது 16 வயது மகன், வீட்டின் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியின் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
     இந்நிலையில், சிறுமி வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரது தாய் பக்கத்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
     இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை போக்úஸா சட்டத்தில் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai