சுடச்சுட

  


  ஈஷா அவுட்ரீச் சார்பில் கோவை தாளியூரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
   கோவை மாவட்டத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுடன் இணைந்து ஈஷா அவுட்ரீச் அமைப்பின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
   அதன்படி, ஈஷா அவுட்ரீச், ஆரோக்கிய அலை அமைப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தாளியூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
   இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு கண் புரை, கிட்டப் பார்வை, தூரப் பார்வை, போன்ற கண் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும். கண் புரையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு கோவை அரவிந்த் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்படும். அறுவை சிகிச்சை, மருந்து, போக்குவரத்து செலவு, தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக செய்து தரப்படும்.
   முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டைகளின் நகல்களை கொண்டு வர வேண்டும் என்றும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 94425 90058, 0422-2651298 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈஷா அவுட்ரீச் அமைப்பு தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai