சுடச்சுட

  


  பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை (சிம்ஸ்) கல்லூரியில் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாட்டு  துவக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  கல்லூரி ஆலோசகர் சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரித் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். எல் அண்டு டி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் தலைவர் லக்மேஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
  முதன்மை பேச்சாளர்களாக முனைவர் நக்கீரன், முருகேஷ் ஆகியோர் பங்கேற்று மேலாண்மை புதிய நடைமுறை மாற்றங்கள் குறித்து பேசினர். ஈராக், எத்தியோப்பியா, துபை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகளில் மேலாண்மை துறையில் பணியாற்றும் மேலாளர்கள், பேராசிரியர்கள் 150 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
  கோவை புளோ லிங்க் சிஸ்டம்ஸ் நிறுவன மேலாளர் குருசெல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், சிம்ஸ் கல்லூரியின் மேலாண்மை குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய விழா மலர் வெளியிடப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai